பிணையில் விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் புதல்வர்!

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

வர்த்தகர் ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக தலங்கமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிட வேண்டும் எனக் கூறி சந்தேக நபரான மாலக சில்வா, வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தல் பணம் கேட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.