இலங்கையில் புதிய அமைச்சரவையின் பின்னர் சமூக மட்டத்தில் கொரோனா பரவும் ஆபத்து!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

நாட்டில் சமூக மட்டத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் அது தீவிரமாக பரவும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரித்துள்ளது.

இந்த வாரத்தில் இருந்து நாடு முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்படும் என, தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமை, புதிய அமைச்சுக்களில் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் மக்கள் சாதாரணமாக இயங்க ஆரம்பித்துள்ளமையினால் சமூகததிற்கு கொரோனா பரவும் ஆபத்து தீவிரமடைந்துள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையின் கீழ் ஏதாவது ஒரு வகையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால் அது கொத்தணியாக ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதனால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார வழிக்காட்டல்களை மிகவும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


you may like this video