இலங்கையின் பிரதான பகுதியில் மீண்டும் இன்று நில நடுக்கம்!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
791Shares

இலங்கையில் இன்று மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி – திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் மிதமான நில அதிர்வு பதிவாகியுள்ளது.

குறித்த நில அதிவு ரிக்டர் அளவில் 1.79 ஆக பதிவாகியுள்ளது. 2 ரிக்டர் அளவுக்கு மேல் சென்றாலே நில அதிர்வாக கருத முடியும் என ஏற்கனவே புவிசரிதவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.

கடந்த வாரமும் கண்டியின் சில பதிகளில் நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. கண்டி, ஹாரகம மற்றும் அநுரகம ஆகிய பகுதிகளில் நில அதிர்வு பதிவாகியது.

குறித்த பகுதியில் பாரியளவில் முன்னெடுக்கப்படும் சுண்ணாம்புக்கல் அகழ்வு காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதென பிரதேசமக்களும் சூழலியலாளர்களும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.