ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in பாதுகாப்பு
74Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் எவரும் நாளை முதல் விசாரணை நடத்தப்படும் இடத்துக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்த போது, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் மௌலவி ஒருவருக்கு காணொளி படம் எடுக்க உலமாவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதவினார் என்ற குற்றச்சாட்டை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னர் மௌலவியிடமும் சட்டத்தரணியிடமும் வாக்குமூலத்தை பெறுமாறு ஆணைக்குழுவின் தலைவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆணைக்குழுவின் ஐந்து ஆணையாளர்களுக்கும் சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் அரச சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.