இலங்கையில் கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து! வைத்தியர்கள் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இன்னமும் நீங்கவில்லை என பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் இயக்குனர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தியர் ஜயருவன் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதிக ஆபத்துபாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அனைவரும் ஆபத்தினை கருத்திற் கொண்டு முழுமையான சுகாதார பாதுகாப்புடன் செயற்படுவது அனைவரதும் கடமையாகும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனாவை கட்டுப்படுத்தும் ஆலோசனைகள் தொடரபில் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து மக்களும் குறைந்த அவதானமே செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்வது சமூகத்தின் பொறுப்பாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.