மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் வசமாக சிக்கிய நூற்றுக்கணக்கானோர்

Report Print Rakesh in பாதுகாப்பு
92Shares

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 355 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 208 பேரும், சட்டவிரோத மதுபானத்தை வைத்திருந்த 106 பேரும் வசமாக சிக்கியுள்ளனர்.

இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட ஏனைய 41 பேரும் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.