வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

Report Print Yathu in பாதுகாப்பு

வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக கிளாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

குறித்த இருவரும் வீதியோரத்தில் சந்தேகத்திற்கிடமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போது இவர்களை சோதனைக்கு உட்படுத்த சென்ற நிலையில் இருவரும் தப்பி செல்ல முற்பட்டுள்ளனர்.

இதன்போதே பையொன்றிலிருந்து குறித்த வெடிபொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் 27 மற்றும் 23 வயதுடைய கிளாலி பகுதியைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பளை பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.