இலங்கை பெண்ணான சாராவை நாடு கடத்தி விசாரித்தால் முக்கிய தகவல்களை கண்டுபிடிக்கலாம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணான ‘சாரா’வை நாடு கடத்துவதற்கு இந்தியாவின் உதவியை நாடுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சாரா இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த முக்கிய தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த முயற்சியில் அரசாங்கத்திற்கு உதவ நாமும் தயாராக இருக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையகத்தின் கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஆணையகத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தேவாலயங்களுக்கு முன் எச்சரிக்கை வழங்கப்பட்டதா? தேவாலயங்கள் எச்சரிக்கையை பெற்றிருந்தால் ஏன் பக்தர்களை எச்சரிக்கவில்லை என்று தான் கேள்வி எழுப்பியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தாம் கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.