கண்டியில் ஆபத்தான நிலைமையில் 256 கட்டடங்கள் - கடுமையாகும் சட்டம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
208Shares

கண்டி நகர சபை எல்லையில் சட்டவிரோதமான மற்றும் அவதானமிக்க 256 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கண்டி நகர சபையின் பிரதான பொறியியலாளர் பாலித அபேகோன் தெரிவிவததுள்ளார்.

அனுமதியற்ற மற்றும் ஆபத்தான நிர்மாணங்கள் தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவினால் ஏற்பாடு செய்த விசேட கூட்டத்திலேயே பொறியியலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஆபத்தான கட்டடங்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியது அவசியமாகும் என ஆளுநர் கூறியுள்ளார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடங்கள் தொடர்பில் உடனடியாக அவதானத்தை செலுத்துமாறும், ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் தொடர்பில் சட்டரீதியான செயற்பாடு மேற்கொள்ளுமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.