வவுனியாவில் நள்ளிரவில் திடீரென களத்தில் இறங்கிய இராணுவத்தினர்

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி, சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை ஒரு மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு பின் மன்னார் பிரதான வீதி வழியாக சென்றிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்தும் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.