ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிப்பது குறித்து ஆராயப்படுகின்றது! இராணுவத் தளபதி

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க வேண்டிய அவசியம் உண்டா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் வரையில் பதிவான கொரோனா நோய்த்தொற்றாளிகளில் ஒரு தொகுதியினர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மேலும் சில பகுதிகளுக்கு விஸ்தரிப்பதா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பதிவான 194 கொரோனா தொற்றாளிகளில் தற்பொழுது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சாராதவர்கள் அதிகளவில் காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை விஸ்தரிக்க நேரிட்டால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படும் என சவேந்திர சில்வா சிங்கள இணைய தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.