ஊரடங்குச் சட்டத்தை மீறிய 142 பேர் கைது

Report Print Kamel Kamel in பாதுகாப்பு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் அந்தப் பகுதிகளில் தரித்து நிற்கவோ, பயணிகளை ஏற்றி இறக்கவோ அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவியர் எவ்வித தடையும் இன்றி பரீட்சை நிலையங்களுக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.