அடுத்த வாரம் கொரோனா தொற்றாளர்கள்ள நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் அடையாளம் காணப்படலாம் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையின் கீழ் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் உள்ளார்களா என கண்டுபிடிக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பரவலான வகையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதற்காக பொது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும். மக்களின் ஆதரவினை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.