இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படக் காரணம்! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலையின் ஆரம்பத்திற்கு வெளிநாட்டவர்களே காரணமாக இருக்கலாம் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர்.

கந்தகாடு கொரோனா கொத்தணி தொடர்பான இறுதி முடிவு ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அதன் பின்னர் சமூகத்திற்குள் கொரோனா காணப்படவில்லை. கொழும்பு பிரதேசத்தை எடுத்துக் கொண்டாலும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியே இறுதியாக சமூகத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சிலர் வருகைத்தந்தனர். கடல் நடவடிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் இருந்து 6 பேர் வந்தனர். அவர்கள் 6 பேரும் நேற்றைய தினம் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய பார்த்தால் சில முறையில் சில விடயங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். எனினும் உறுதியான முறையில் கூற முடியாத நிலை உள்ளதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.