மூன்று நாள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ள இந்திய - இலங்கை கடற்படையினர்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இந்திய - இலங்கை கடற்படையினர் மூன்று நாள் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்

'ஸ்லினெக்ஸ்' என்ற பெயரிலான இரண்டு கடற்படைகளினதும் 8வது கடற்பயிற்சியாக இது நாளை முதல் அக்டோபர் 21 வரை திருகோணமலையில் இருந்து திட்டமிடப்பட்டுள்ளது,

கொரோனா தொற்றுக் காரணமாக இந்த பயிற்சி கடலில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை கடற்படையின் எஸ்.எல்.என் ஷிப்ஸ் சாயுரா, மற்றும் கஜபாஹ பயிற்சி கப்பல் உள்ளிட்ட கப்பல்கள், ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலகவின் தலைமையில் இந்த பயிற்சியில் ஈடுபடும்.

அதேநேரம் இந்தியாவின் கிழக்கு கடற்படைத் தலைவரான ரியர் அட்மிரல் சஞ்சய் வாட்சயன் தலைமையில் இந்திய கடற்படையினர் இதில் பங்கேற்கவுள்ளனர்

கூடுதலாக, இந்திய கடற்படையின் உலங்கு வானூர்திகள் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து வானூர்தியும் பயிற்சியில் பங்கேற்கவுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடந்த வருடத்துக்கான பயிற்சி 2019 செப்டம்பரில் விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு, சூழ்ச்சிகள் மற்றும் பறக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேற்பரப்பு மற்றும் வான்வழிப் பயிற்சிகள் இந்தப் பயிற்சியின் போது திட்டமிடப்பட்டுள்ளன.