நபரொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் தம்பலகாமத்தில் ஒன்பது தோட்டாக்கள் மீட்பு

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலிருந்து ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த தோட்டாக்கள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பலகாமம், ஜயபுர காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட தோட்டாக்கள் ஒன்பது மில்லிமீற்றர் அளவுடையவை எனவும், இவை அதிக சக்தியுடையவை எனவும் தெரியவருகிறது.

இவை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.