சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு
293Shares

பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்த கொழும்பு - பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் நான்கு அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பம்பலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்ட பின்னர் இவர்கள் அங்கு தங்களது உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பி.சி.ஆர் சோதனைகளை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

மற்ற இருவரும் தங்களின் இல்லங்களில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.