ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு
244Shares

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் எனக் கூறப்படும் மொஹமட் சஹ்ரானின் மனைவி, அந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா தற்போது குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ள பாத்திமாவிடம் தற்பொழுது சாட்சியம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.