ஊரடங்கு சட்டம் தொடர்பில் இன்று அடுத்த கட்ட தீர்மானம்! சவேந்திர சில்வா

Report Print Sujitha Sri in பாதுகாப்பு
2353Shares

ஊரடங்கு சட்டம் தொடர்பான அடுத்த கட்ட தீர்மானத்தை இன்றைய தினம் கிடைக்கவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொாடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே இன்றைய தினம் அதிகளவில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் 309 கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று காலை 50 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள 2 தொழிற்சாலைகளை சேர்ந்த ஊழியர்கள் எனவும், 6 பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்கள் எனவும், மேலும் 22 பேர் மினுவங்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்பிறகு, நேற்று மாலை மேலும் 259 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில் அவர்களில் 2 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், 182 பேலியகொடை மீன் சந்தையிலிருந்தும், 75 பேர் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2817 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.