கம்பஹாவில் குவிந்த மக்களால் ஏற்பட்டுள்ள ஆபத்து!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நி்லையில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பிரதான நகரங்களுக்கு அருகில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக நிலையங்களிலும், தனியார் மற்றும் அரச வங்களில் பொது மக்கள் குவித்துள்ளனர். பெரும்பாலான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதேவேளை, மினுவாங்கொடவில் பெரும்பான்மை மக்கள் சுகாதார பாதுகாப்பு முறைக்கமைய செயற்பட்டு வரிசையில் நிற்பதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் ஒரு சிலர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களை ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

சம காலத்தில் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடும் வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You may like this video