களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 கிராம சேவகர் பிரிவுகள்

Report Print Banu in பாதுகாப்பு

நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் களுத்துறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 7 கிராம சேவகர் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பண்டராகம பொலிஸ் பகுதியில் உள்ள 7 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு நடைமுறையிலிருக்கும் என்று அரசாங்க தகவல்த் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

  • பொஹவத்த
  • பமுனுமுல்ல முஸ்லிம் பகுதி
  • ஹிரிமந்துடவ
  • கொரவல
  • அதுலுகம மேற்கு
  • பமுனுமுல்லா
  • கலஹமண்டிய