வெளிநாடுகளில் இருந்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் இப்போதும் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நபர்களை தேடும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச பொலிஸாரின் “இன்டர்போல்” உதவியை நாடவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்குள் இருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளும் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,