மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
இந்த விடயத்தை ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 52 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவர்களில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் கைதிகளால் பணயம் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறையதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்று ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் காரணமாக சிறையதிகாரிகள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்.
அத்துடன் சிறைக்கூடத்தில் ஏற்பட்ட தீயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் வன்முறைக்கான காரணம் குறித்த விசாரணை குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.