கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டில் வழக்கு! அஜித் ரோஹன

Report Print Steephen Steephen in பாதுகாப்பு
88Shares

கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக அறிய நடத்தப்படும் PCR பரிசோதனைகளை செய்து கொள்ளாது தவிர்க்கும் நபர்களை தேசத்துரோகிகள் எனக் கருதி, அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

களுத்துறை, பண்டாரகம - அட்டுலுகம பிரதேசத்தை சேர்ந்த கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் இவ்வாறு செயற்பட்டு வருவதாக திட்டமிட்டு செயற்படும் குழு ஒன்றின் நபர்கள் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பண்டாரகம உட்பட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த மக்களை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கினால், அவர்கள் கட்டாயம் அதனை செய்துக்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளவில்லை என்றால், அவர்களை தேசத்துரோகிகளாக கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.