புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம்! இராணுவத் தளபதி

Report Print Sujitha Sri in பாதுகாப்பு
666Shares

புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் இருப்பவர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கிளைமோர் குண்டு ஒன்றினை பேருந்தில் எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த குண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது இல்லை. மிகவும் பழமை வாய்ந்தது. இந்த நாட்டில் தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் சமூகத்தில் இருக்கின்றனர்.

இவ்வாறானாவர்கள் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ளவர்களை இலக்கு வைத்து வௌிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்பட்டு இந்த மாதிரியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இராணுவத்தினர் வேறு செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும் சந்தர்ப்பங்களிலேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

You My Like This Video