ஆசனங்களில் அமராது பொதுப்போக்குவரத்தில் பயணிக்க முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு குறித்து கடந்த ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு மீள வெளியிட்டுள்ளது.
பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்கள் இந்த சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் நிற்கக் கூடாது எனவும், ஆசனங்களில் அமர்ந்து கொண்டு மட்டுமே போக்குவரத்து செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் ஆசன எண்ணிக்கையை விடவும் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகன உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டத்தை மீறிச் செயற்படுவோர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.