பண்டிகை காலப்பகுதியில் கடுமையான பயணக்கட்டுப்பாடு?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
114Shares

எதிர்வரும் பண்டி காலப்பகுதியில் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு செயற்படவில்லை எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை கட்டுப்படுத்துவதென்றால் மேல் மாகாணம் உட்பட ஆபத்துள்ள பிரதேசங்களில் கடுமையான பயணக்கட்டுபாடு விதிக்கப்பட வேண்டும் என சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த பண்டிகை காலப்பகுதியினுள் அவதானமற்ற முறையில் செயற்படும் 3 குழுக்கள் தொடர்பில் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பில் பணியாற்றிவிட்டு பண்டிகை விடுமுறையின் போது சொந்த இடங்கள் நோக்கி செல்பவர்களாலும், விடுமுறையின் போது சுற்றுலா பயணம் செல்பவர்களாலும், மற்றவர்கள் கிராமப்பகுதிகளில் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான நகர பகுதிகளுக்கு வருபவர்களினாலேயே அதிக ஆபத்துக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிகவும் ஆபத்தான காலப்பகுதியில் கொண்டாடப்படும் பண்டிகை என்பதனால் பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும். இல்லை என்றால் எதிர்பாராத ஆபத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.