உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் சட்டத்தரணி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை மேலும் மூன்று மாத காலத்துக்கு தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை குற்றவியல் புலனாய்வுத் துறையினர் நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லாஹ் தொடர்பான மனு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் விசாரிக்கப்பட்டபோதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மன்றில் அறிவிக்கப்பபட்டது.
அவர் களுத்துறை பொலிஸ் கல்லூரியின் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.