கொரோனா தொற்றுக்குள்ளான வாசுதேவ நாணயக்கார நடத்திய பிறந்தநாள் விருந்தால் சர்ச்சை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
854Shares

தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பிறந்த நாள் விருந்து ஒன்றை நடத்தியுள்ளார்.

கடந்த 5ஆம் திகதி தனது அமைச்சில் இந்த விருந்து நடத்தப்பட்டுள்ளது.

அந்த விருந்தில் அமைச்சின் உயர் அதிகாரிகள் உட்பட மேலும் சில அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியாகுவதற்கு முன்னர் தனது புகைப்படங்களை அமைச்சர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய அமைச்சர் அதனை அமைச்சர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.