பொலிஸார் முன்னிலையில் குழுவொன்றால் நபரொருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி! ஏழு பேர் கைது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு
204Shares

பொலிஸார் முன்னிலையில் குழு ஒன்றினால் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காணொளியின் உள்ளடக்கம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் அதே குற்றங்கள் தொடர்பாக மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.