பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Sujitha Sri in பாதுகாப்பு
630Shares

வார இறுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு பொது மக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு அமைய செயற்படாத அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த 1,001 பேருக்கு எதிராக தற்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 24 மணித்தியாலய காலப்பகுதியில் முகக்கவசம் அணியாத 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.