காஸா தாக்குதல்களுக்கு விமல் வீரவன்ச கட்சி கண்டனம்

காஸா நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலியப் படையினர், காஸா நிலப்பரப்பின் மீது கடும் தாக்குதல்களை நடாத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தாக்குதல்களின் மூலம் சிவிலியன்கள் கொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

வான் தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள் உள்ளிட்ட 50 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாரிய மனித சங்காரமொன்றை செய்ய இஸ்ரேல் ஆயத்தமாகி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது சர்வதேச சமூகமோ இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிடவில்லை.

இந்த தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் இந்த மௌனம் உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

தாக்குதல்களில் உயிரிழந்த பலஸ்தீன சிவிலியன்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers