குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டத் திருத்தம் செய்யத் தேவையில்லை: நிமால் சிறிபால டி சில்வா

குற்றப் பிரேரணை தொடர்பில் சட்டத் திருத்தம் செய்யத் வேண்டிய அவசியமில்லை என அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமுலில் இருக்கும் அரசியல் அமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைக் கொண்டு குற்றப் பிரேரணை விசாரணைகளை நடாத்த முடியும். புதிதாக சட்டத் திருத்தங்கள் அவசியமில்லை.

நாடாளுமன்றமும், தெரிவுக்குழுவும் விசாரணைகளை நடாத்த நடவடிக்கை எடுக்கும்.

முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரக்கோனுக்கு எதிரான குற்றப் பிரேரணை விசாரணைகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு நடத்திய சந்தர்ப்பத்தில், நிலையியற் கட்டளைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers