இலங்கையில் மூன்று லட்ச ரூபா கடனாளியாக பிறக்கும் குழந்தைகள்

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மூன்று லட்ச ரூபா கடனாளயாகவே பிறக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் தேசப் பற்றைப் பிரச்சாரம் செய்து வரும் இந்த அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் திருப்தி அடையும் வகையில் இல்லை.

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தலா மூன்று லட்ச ரூபா வெளிநாட்டுக் கடனாளியாகவே பிறக்கின்றது.

கோப் ஆணைக்குழுவில் கடமையாற்றிய போது ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் பணத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை குறித்து அம்பலப்படுத்தியிருந்தேன்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித விசாரணைகளையும் நடத்தவில்லை.

கோப் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட சில ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர்.

நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை துரித கதியில் சீரழிந்துள்ளது.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளினால் நாட்டு மக்களே பொருளாதார சுமைகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers