நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜராகுமாறு பிரதம நீதியரசருக்கு அழைப்பு

குற்றவியல் பிரேரணை தொடர்பிலான விசாரணைக்காக  நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னால் சமுகம் தருமாறு இலங்கையின் பிரதம நீதியரசரை, நாடாளுமன்ற தெரிவுக்குழு கேட்டுள்ளது.

தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்க கால அவகாசத்தை பிரதம நீதியரசர் கோரியிருந்த போதும் அது நிராகரிக்க்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற தெரிவுக்குழு, பிரதமநீதியரசரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்னிலையில் சமூகமளிக்குமாறு  அழைத்துள்ளது.

இதற்கிடையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நாடாளுமன்ற குழுவுக்கு எதிராக தடை உத்தரவைக் கோரி குடியியல் சமுகம் ஒன்று வழக்கு தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers