ஜனாதிபதி என்ற தனி நபருக்கான செலவீனத்துக்கு 740 கோடி ரூபாயா?

வரவு - செலவுத் திட்டத்தில்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற தனி நபருடைய செலவுக்காக ரூபா 740 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமையானது எவ்வாறு நியாயமாகும் என ஜனநாயக தேசிய முன்னணியின் எம்.பி. விஜித ஹேரத் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தை உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சி இன்று அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது.

2005 ஆம் ஆண்டில் இம்முறைமை இரத்துச் செய்யப்படும் என உறுதியளித்தே மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி பதவிக்கு வந்தார். எல்லையில்லா அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களின் கீழ் அமைச்சரவை கைப்பொம்மையாகவே உள்ளது.

அரச ஊழியர்களுக்கு வாழக்கூடிய சம்பளம் இல்லை. மக்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர். பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி என்ற தனி நபருக்காக ரூபா 740 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Latest Offers