நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் அழுத்தங்களை பிரயோகிக்கிறது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

நீதித்துறையின் மீது நிறைவேற்று அதிகாரம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரதம நீதியரசர் மீது அரசியல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது. நிறைவேற்று அதிகாரம் நீதிமன்றக் கட்டமைப்பை சீரழிப்பதற்கு முன்னதாக பதவி விலக வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் மீதான தாக்குதலாக இதனைக் கருதக் கூடாது, இதனை நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான தாக்குதலாக கருதப்பட வேண்டும்.

நாட்டின் நீதித்துறையை பாதுகாக்க உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் முயற்சி எடுத்தால் அதற்கு ஏனைய பொதுமக்களும் ஆதரவளிப்பார்கள்.

நீதியரசர்கள் சிந்தித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமானது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Latest Offers