போரின் பின்னர் நாடு பின்னோக்கி நகர்ந்துள்ளது: லக்ஸ்மன் கிரியல்ல

போரின் பின்னர் நாடு பின்னோக்கி நகர்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

எமது நாட்டின் வரலாறு குறித்து நாம் பெருமிதத்துடன் பேசுகின்றோம். எனினும், போரின் பின்னர் நாட்டில் அபிவிருத்தி ஏற்படவில்லை.

ஆளும் கட்சியினர் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடாது.

எந்தக் காலத்தில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 200 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன?.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண எம்மால் முடியாதுள்ளது.

சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட நாம் பழகிக்கொள்ள வேண்டும் என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers