வடக்கில் ஜனாதிபதியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களால் மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் இடம்பெறவிருந்த மாகாண மட்டப் பரீட்சைகள், ஜனாதிபதியின் பிறந்ததினக் கொண்டாட்டங்களால் இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கு பெறச் செய்வதற்காகவே பரீட்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலைகளிலும் தரம் 9 மாணவர்களுக்கு பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், பாடசாலைக்கு வருகை தந்திருந்த அரசதரப்பினைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் பிறந்த தின நிகழ்வுகளைக் கொண்டாடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி பிறந்ததினத்தைச் சகல திணைக்களங்களும், பாடசாலைகளும் கொண்டாட வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவும் அமைச்சுகளால் வழங்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து, வடமாகாணத்தின் சகல பாடசாலைகளிலுமே இந்தப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers