மடிக்கணனிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி அடக்க முயல்கிறது அரசு: ரணில்

மடி கணணிகளை ஊடகவியலாளர்களுக்கு வழங்கி அவர்களை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு மடி கணனிகளை வழங்குவது தொடர்பில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட்டது என்பது தெரியவில்லை. இவ்வாறான திட்டங்களின் போது செய்தி ஆசிரியர் பேரவையினால் எந்த ஊடகவியலாளருக்கு மடி கணனி வழங்குவது என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

எனினும், செய்தி ஆசிரியர் பேரவையும் அமைதி காத்து வருகின்றது. முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் மடி கணனிகளைப் பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு சவால் விடுகின்றேன்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் நண்பர்களுக்கு வரிச் சலுகையும், சிறியவர்களுக்கு மோட்டார் பந்தய கார்களும், ஊடகவியலாளர்களுக்கு மடி கணனிகளும் வழங்கப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Latest Offers