இராணுத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தால் தமிழ் சமுதாயம் தட்டிக்கழிக்க வேண்டும்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

இலங்கை இராணுத்தில் இணையுமாறு படைத் தளபதிகள் விடுக்கும் அழைப்பை தமிழ் சமுதாயம் தட்டிக்கழிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இராணுவத்திற்கு ஆளணித் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் வர்த்தமானி அறிவித்தல் மூலமே ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும்.

இங்கு சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் வீடு வீடாகச் சென்றும் ஒலிபெருக்கி மூலமும் படையில் சேர்க்கும் நடடிவடிக்கை ஈடுபட்டுள்ளதோடு, பெற்றோர்களுக்கு மலை அணிவித்து படையில் சேர்த்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடகளில் கிளிநொச்சி மற்றும் யாழ் படைத்தளபதிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் யாழ் படைத்தளதிகள் தமது நிலையைக் கடந்து இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருதானது வடபகுதி முழுவதும் இராணுவ அதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு செயற்பாடாகவே அமைந்துள்ளது.

வடபகுதியில் 18ற்கு மேற்பட்ட படைப்பிரிவுகள் செயற்பட்டு வருகின்றன. வடபகுதிகளில் படைக்குறைப்பை மேற்கொள்ளுமாறு அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐ.நா ஆகியன தெரிவித்து வரும் நிலையில் வடபகுதியில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

அத்துடன் சர்வதேச நாடுகளில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால் ஆளணி மற்றும் அதன் வளங்கள் யாவும் குறைக்கப்டுவது வழக்கம். ஆனால் இங்கு போர் முடிந்து மூன்று வருடங்களைக் கடந்த நிலையிலும் ஆளணி மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் அதித்துச் செல்வது ஒரு வேடிக்கையானதாக அமைந்துள்ளது.

ஒரு நாட்டின் இராணுவத்திற்கு அந்தந்த மாவட்டத்தில் கடமையாற்றும் கட்டளைத் தளபதிகள் இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்ளலாம் என்றால், ஆசிரியர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு அங்குள்ள திணைக்களத் தலைவர்கள் ஏன் ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத் தளபதியின் இவ்வாறான அழைப்பை தமிழ் தேசியக் கூட்மைப்பு வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers