சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு தாய் தலைமறைவு: கிண்ணியாவில் சம்பவம்

திருகோணமலை, கிண்ணியா தள வைத்தியசாலையில் தாயொருவர், தனது இரண்டு நாளேயான சிசுவை கைவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுக்கு நேற்றிரவு 9.00 மணியளவில் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இன்று பகல் ஒரு மணியளவில் தனது குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுச் சென்றுள்ளதாக கிண்ணியா தள வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து, இவரை வீட்டுக்கு அனுப்பத் தீர்மானித்திருந்ததாகவும், தாதிமார் கடமையில் இல்லாத நேரம் பார்த்து, தனது குழந்தையை கட்டிலில் வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பெண்ணையும் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Latest Offers