கொலையாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படுகின்றது: கரு ஜயசூரிய

கொலையாளிகளுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

60, 70 வயதான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இந்த நிலைக்கு நாடு இன்று தள்ளப்பட்டுள்ளது.

17ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டமையினால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நபர்களின் உடல் உறுப்புக்களை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யும் கலாசாரம் உருவாகியுள்ளது.

அதிகாரமுடையவர்களுக்கு சட்டம் ஒருவிதமாகவும், அதிகாரமில்லாதவர்களுக்கு சட்டம் மற்றொரு விதமாகவும் அமுல்படுத்தப்படுகின்றது என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Latest Offers