தேவையின்றி மூக்கு நுழைக்கவேண்டாம்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி பதில்

ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் டெசோ தீர்மானங்களை அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

டெசோ தீர்மானங்களை ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் அனுப்பினாலேபோதும், நேரில் சென்று தான் கொடுக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கேலியாகச் கூறியிருந்தார்.

அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில்,

எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது, பண்ருட்டியார் ஐ.நா. சபைக்குச் சென்று அங்கே பேசியதாக அப்போது செய்தி வந்ததை அறிவீர்கள். அப்போது அவருடைய அந்தப் பேச்சை அவர் நேரிலே சென்று பேசாமல், தொலைநகல் மூலம் அனுப்பியிருக்கலாம் அல்லவா? இவர் எதற்காக நேரிலே சென்றார்?

அவரை ஐ.நா. விற்கு அனுப்பிய கட்சியிலேயே இவர் நிலைக்கவில்லை. இப்போதாவது தேவையில்லாதவற்றில் மூக்கை நுழைக்காமல், இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்கட்டும் என்று அமரர் ஏ.ஜி. யின் ஆத்மா என ஒன்றிருந்தால், அது சொல்லக் கூடும்.

Latest Offers