கூட்டமைப்பையும் அரசையும் பேசவைக்க தென்னாபிரிக்கா முயற்சி: சம்பந்தன் தலைமையிலான குழுவுக்கு அழைப்பு

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுள்ள பேச்சுவார்த்தையினை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தென்னாபிரிக்கா கடுமையான முயற்சி எடுத்து வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினரை எதிர்வரும் ஜனவரி மாதம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

அரசுக்குழுக்களுடனும், கூட்டமைப்பினருடனும் இது பற்றி ஏற்கனவே தென்னாபிரிக்க அரச தரப்பினர் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அடுத்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பினரைச் சந்திக்க தென்னாபிரிக்கா முயற்சி எடுத்து அழைப்பு விடுத்துள்ளது.

Latest Offers