உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 12வது உலகத் தமிழ் மாநாடு இந்தியா - பெங்களுரில் 2014 ஓகஸ்ட் 8 – 10 வரை நடைபெற ஏற்பாடு.

உலகளாவிய தமிழினத்தை மொழியாலும்பண்பாட்டாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற உயர் நோக்குடனும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடனும்...

...அரசியற் சார்பற்று இனமதபேதங்களைக் கடந்து தமிழ்ப் பண்பாட்டாளர் எனும் ஒரேகுடையின்கீழ் செயல் படவேண்டும் என்ற நிறைந்த கொள்கையுடனும் தமிழ்மொழியினை மறந்து போனவர்களைத் தாய் மொழித் தமிழுணர்வுக்குக் கொண்டுவரும் நல் நோக்குடன் இவ்வியக்கம் 1974ம் ஆண்டு தைத்திங்கள் சுறவம் 08.01.74 அன்று இலங்கையின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது தோற்றுவிக்கப்டது.

பன்னிரண்டாவது உலகத்தமிழ் மாநாடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் - பெங்களுரில் 2014 ஆகஸ்ட் 8ம் நாள் முதல் 10ம் நாள் வரை நடைபெறவுள்ளது

இது தொடர்பாக உலகளாவிய தலைமை எடுத்த முடிவதனை 01.07.13 அன்று ஐரோப்பிய தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செயலமர்வு ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. செயலாளர்நாயகம் திரு.துரை கணேசலிங்கம் அவர்களது இணைவில் இம்மாநாட்டுப் பொறுப்பாளராக கர்நாடாவின் அம்பேர்க்கார் சட்டக் கல்லூரி முதல்வரும் இயக்கத் தலைமையின் சட்டஆலோசகருமான பேராசிரியர் கலாநிதி.சி.இராமமூர்த்தி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில சிறப்புத்தலைவரும் அகிலக்கல்விப் பணிப்பாளருமாகிய திரு.வி.சு.துரைராஜா அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ்நாடு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகமும் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கமும் இணைந்து நடாத்தும் அயலகத் தமிழாசிரியர்களுக்கான டிப்ளோமா (பட்டயத்தேர்வு) கல்வித்திட்டத்தினை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. இவை அனைத்தும் நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலங்கையில் கிளிநொச்சியில் அமையவிருக்கும் தமிழ்ப் பண்பாட்டு மையம் செயற்படுவதை நடைமுறைப்படுத்துவதற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைகிளை பதிவு செய்யப் பட்டுள்ளதை எமது ஒன்றியம் வரவேற்பதுடன் இந்த பண்பாட்டு மையம் அமைப்பதற்கு தலைமையகத்தின் சார்பிலும் இலங்கைக் கிளையின் சார்பிலும் சட்டரீதியான குழுவொன்று அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது.

மேற்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலமர்வில்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராகத் திரு.துரை கணேசலிங்கம் அவர்களும் உதவித்தலைவராகத் திரு.தர்மலிங்கம் ரவீந்திரன் அவர்களும் செயலாளராக உ.த.ப.இயக்க ஐரோப்பிய கல்வி இணைப்பாளரான திரு.கிறேசியன் யேம்ஸ் அல்ஸ்ரன் அவர்களும் பொருளாளராகத் திரு. அம்பி சிவகரன் அவர்களும் ஏகமனதாகத் தெரிவு பெற்றனர்

யேர்மன் கிளையின் தலைவராக

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில இணைப்பாளர் திரு. இராஜசுரியர் அவர்களும் உதவித்தலைவராகத் திரு கு.மோகன் அவர்களும் செயலாளராகத் திரு.தர்மலிங்கம் ரவீந்திரன் அவர்களும் பொருளாளராகத் திரு.கிறேசியன் யேம்ஸ் அல்ஸ்ரன் அவர்களும் தெரிவாகினர்.

செயலமர்வுகள் இனிதே நிறைவு பெற்றது.

உ.த.ப. இயக்கமும் தனது 40வது நிறைவில் பெருமிதம் கொள்கிறது

Latest Offers