நேற்று நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியில் தமிழீழம் அணி தோல்வி

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வதேச உதைபந்தாட்ட போட்டியில் நேற்று சனிக்கிழமை தமிழீழ அணியும் Occitania அணியும் மோதினார்கள். இந்தப் போட்டியில் தமிழீழ அணி தோல்வியைத் தழுவியது.

போட்டியில் பங்குபற்றிய அணி வீரர்களின் விபரம் பின்வருமாறு

ஜிவிந்தன் நவநீதன் (எல்லை விளையாட்டுனர் )
பனுஷந்த் குலேந்திரன் (முன்னேறி விளையாட்டுனர்)
பிரஷாந்த் ராகவன் (எல்லை விளையாட்டுனர்)
கஜேந்திரன் பாலமுரளி (மத்திய விளையாட்டுனர் )
மதன்ராஜ் உதயணன் (மத்திய விளையாட்டுனர் )
மஜூரன் ஜெகநாதன் (முன்னேறி விளையாட்டுனர்)
மேனன் நகுலேந்திரன் (எல்லை விளையட்டுனார் )
கெவின் நாகேந்திரா (தடுப்பாளன் )
கதிரவன் உதயனன் (தடுப்பாளன் )
அருண் விக்னேஸ்வராஜா (தடுப்பாளன் )
உமேஷ் சுந்தரலிங்கம் (பந்து காப்பாளன் )
பிரவீன் நல்லதம்பி (எல்லை விளையாட்டுனர் )

நேற்று Isle of man இல் TynwaldHill  மைதானத்தில் மாலை 19.00 மணிக்கு Occitania அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதைபந்தாட்ட போட்டியில் Occtinaia 5 இலக்குகளையும் தமிழீழ அணி 0 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

போட்டித் தொடக்கதில் இரு அணியினரும் விடாது முயன்றாலும் Occitania வின் கை மேலோங்கி இருந்தது. போட்டி முதல் சுற்றில் Occitania  நான்கு உதைபந்தாட்ட இலக்குகளை போட்டு முன்னிலையில் இருந்தனர்.

எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள்.

மீண்டும் அடுத்த அரைச் சுற்றுக்கு சுறு சுறுப்புடன் மைதானம் இறங்கிய எமது வீரர்கள் பந்தை கையாண்ட விதம் மிக சுவாரசியமாக இருந்தது. எமது வீரர்கள் ஆவேசமாக விளையாடினாலும் Occitania அணியினர் மீண்டும் ஒரு பந்தினை இறக்கி தமது மொத்த இலக்குகளை 5 ஆக்கி கொண்டனர்

இறுதி அரைச் சுற்றில் தமது பந்தாட்ட திறமையை கடைபிடித்து எமது வீரர்கள் மூன்று இலக்குகளை அடைய முயன்றனர். ஆனாலும் எதிர் அணி பந்து காப்பாளர் அதை தடுத்து நிறுத்தி விட்டார்.

இறுதியில் எமது வீரர்களின் முயற்சியை மிகவும் கடினத்துடன் எதிர்கொண்டு இந்த போட்டியை Occitania அணி வெற்றி கொண்டனர்.

இப் போட்டி பற்றி தாய்த் தமிழ்நாட்டில் இருந்து “Mohankumar KKS” சமூக வலைத்தள முகமாக கருத்து தெரிவிக்கையில்

"முதல் சுற்றில் நமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இரண்டாம் சுற்றில் நமது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை தந்தார்கள. அடுத்த போட்டியில் நம் அணி சிறப்பான பயிற்சியோடு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நம் புலிக்கொடி ஓங்கிப்பறக்க வேண்டும். நம் ஒவ்வொரு மூச்சும் நம் விடுதலையை நோக்கி பயணிக்க வேண்டும்.

எனக்கு ஒரு பெருமை உண்டு (நாடு அடைந்த பிறகுதான் நாட்டின் கொடி உலகில் பறக்கும்) நாளை அடையும் என் நாட்டின் கொடி நேற்றே உலகும் முழுவதும் ஓங்கிப் பறந்து கொண்டிருக்கிறது! நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்தோம் என்பதற்காக எங்கள் உணர்வு?

என் 25 வயது வாழ்க்கையில் இரவு 3:00 மணி வரை காத்திருந்து 4:30 மணி வரை நான் பார்த்த போட்டி நம் தமிழ் ஈழம் அணியின் விளையாட்டு போட்டி, இது என் அணி, தமிழ் அணி. ஈழப் பெண் சொன்னாள் தாய்மண்ணை (ஈழம்) முத்தமிட ஆசை என்று, இன்று எனக்கு அது பேராசையாக உள்ளது.

இன்று 7 ஜூலை 2013 மூன்றாவது இடத்துக்கான போட்டிக்கு தமிழீழ அணி Raetia வை எதிர்கொள்கிறது.

இத் தருணத்தில் தமிழீழ அணி Raetia வை மூன்றாவது தடைவையாக எதிர்கொள்கிறது.

முதல் முறை குர்திஸ்தானில் June 2012 லும், இவ்வருடம் நேற்று முன்தினம் இரண்டாவது தடவையாகும் எதிர்கொண்டனர்.

முதல் இரண்டு தடவைகளும் Raetia அணியை எமது தமிழீழ அணி வெற்றிகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

இன்று 2 மணிக்கு நேரடி ஒளிபரப்பு ஆரம்பமாகும், அதனை www.tamileelamfa.org or www.tyouk.org இல் பார்க்கலாம்.

Latest Offers