சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் புளொட் அமைப்பின் செயலாளர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் - சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம்

வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், அவ்வமைப்பின் செயலாளர் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.

புளொட் அமைப்பின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் அவ்வமைப்பின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) அவர்களின் முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பித்தக்கது.

கடந்த 11ம் திகதி இடம்பெற்ற பதவிப் பிரமாண நிகழ்வை 9 உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர். ஏனைய உறுப்பினர்கள் வட மாகாண  முதலமைச்சர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம்

வட மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவாஜிலிங்கம், இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

வல்வெட்டித்துறை மாவட்ட வைத்திய அதிகாரி ஜே.மயிலேறுபெருமாளின் முன்னிலையில், சிவாஜிலிங்கம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அமைச்சுப் பதவி ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒன்பது உறுப்பினர்கள், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற பிரதான பதவிப் பிரமாண நிகழ்வுகள் பங்கேற்கவில்லை.

தனியாக முள்ளிவாய்க்கலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாக ஒன்பது உறுப்பினர்கள் உத்தேசித்திருந்தனர்.

எனினும், மன்னார் மாவட்ட ஆயரின் தலையீடு காணரமாக எட்டு உறுப்பினர்கள் பதவிப் பிரமாண நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலில் நடத்தவில்லை.

இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


Latest Offers