ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அஸ்வர், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சத்தியப்பிரமாண வைபவம் நிறைவடைந்ததும் வடமாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மரத்தினால் செய்யப்பட்ட அழகிய பிள்ளையார் சிலை ஒன்றினை அன்புப் பரிசாக வழங்கியுள்ளார்.


Latest Offers