பிரான்சின் இளையோர்களின் கருத்தாடலில் தமிழினப் படுகொலை விவகாரமும் பிரஸ்தாபிக்கப்பட்டது!

பிரான்சினைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் CNRJ எனும் இளையோர்களின்  சிந்தனை வட்ட மையத்தின் வருடாந்த கருத்தாடலில் இலங்கைத்தீவின் தமிழினப் படுகொலை விவகாரமும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

உளவியல் சிந்தனையாளர் Frédéric Fappani அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த மையம் ,பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பி,ல் இளையோர்களின் நிலைப்பாடுகள் குறித்து பிரான்சின் அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கிவருகின்றது.

இச்சிந்தனை மையத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்தன் சிவசுப்ரமணியம் அவர்கள் தமிழ் இளையோர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் இச்சிந்தனை மையடுத்தின் வருடாந்த கருத்தமர்வில், சர்வதேச விவகாரம் தொடர்பிலான இளையோர்களின் நிலைப்பாடுகள் எனும் தொனிப்பொருளிலான கருத்துப் பகிர்வில் இலங்கைத்தீவின் தமிழினப் படுகொலை விவகாரம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை மையமாக கொண்டு , அனைத்துலக விசாரணைக்கான அழுத்தங்களுக்கு மேற்கொண்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்ததோடு, அனைத்துலக விசாரணைக்கான நிலையினை எட்டுவதற்கான தொடர்சியான களப்பணிகள் குறித்தும் கருத்துபரிமாறப்பட்டது.

குறிப்பாக ஆபிரக்காவின் 14 நாடுகளில் கிளை பரப்பியுள்ள இச்சிந்தனை மையத்தின் ( Brukina Faso ) புறுக்கினா பசோ நாட்டுப்பிரதிநிதி O.Paul Koalaga அவர்கள், ஆபிரிக்க யூனியனுடன் தமிழர் தரப்பின் தொடர்பாடலுக்கான வழிமுறைகள் குறித்த பிரஸ்தாபித்திருந்தார்.

இதேவேளை பிரான்சுக்கான சுவிஸ் தூதரகத்தின் பிரதிநிதி Mireille Chaupuis அவர்களும் இக்கருத்தரங்கில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்.

நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கி வருகின்ற இச்சிந்தனை மையம் ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Latest Offers